தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனை நாடாளுமன்றிலிருந்து வெளியேற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தொடர்ந்தும் அரச விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறீதரன் அண்மையில் இந்திய விஜயத்தை முடித்துக் கொணடு நாடு திரும்பிய போது, மே 17 என்னும் பிரிவினைவாத அமைப்பின் உறுப்பினர் தமிழ் பிரபாகரன் என்பவரை நாட்டுக்குள் அழைத்துச் சென்றதாக சிங்கள பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
சிறீதரனின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்ய மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் அவசியமாகின்றது. நெடுந்தீவை சேர்ந்த சிறீதரன் ஆசிரியராகவும் கிளிநொச்சி பாடசாலையின் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண கட்டளைத் தளபதி தீபன் இவரது நெருங்கிய உறவினர். சிறீதரன் வடக்கில் உணர்வுகளை தூண்ட முயற்சித்து வருகிறார் என பாதுகாப்பு புலனாய்வு பிரிவினர் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.