பிரான்ஸில் தமிழினிக்கு பொதுமக்கள் அஞ்சலி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறையின் பொறுப்பாளர் தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்பிரமணியம் சிவகாமிக்கு பிரான்ஸ் இவ்றிசூசென் பகுதியில் நேற்று முன்தினம் நினைவு வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

1986 ஆம் ஆண்டு முத்தையன் கட்டுப்பகுதியில் வீரச்சாவடைந்த மாவீரர் பப்பா பிலிப்ஸின் சகோதரி ஈகைச் சுடரை ஏற்றி  மலர் வணக்கம் செலுத்தினார். அக வணக்கத்தைத் தொடர்ந்து நினைவுரை இடம்பெற்றது. நினைவுரையில், தமிழினியின் ஆரம்பகால ஈடுபாடு பற்றியும் அவருடைய அரசியல் திறமைகள் பற்றியும் தேசியப் போராட்டத்தில் அவர் கொண்ட பற்றுதி பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் மாவீரர் தமிழினியின் திருஉருவப் படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தினர்.

அரசியல்துறைதமிழினிதமிழீழ விடுதலைப் புலிபிரான்ஸ்மலர்வணக்கம்மாவீரர்
Comments (0)
Add Comment