கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் தமிழர் பகுதியில் பல்லாயிரம் தமிழர்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டனர். அத்தோடு பல்லாயிரம் அப்பாவி மக்கள் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர். அவர்கள் தொடர்பாகவும் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டியும் பிரித்தானியா கிரீன் பார்க்கில் தொடங்கிய மாபெரும் பேரணி பிரித்தானிய பாராளுமன்றதிற்கு முன்பாக முடிவடைந்தது.
இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரம் தமிழர்கள் கலந்துகொண்டனர்.