பிரித்தானியாவில் தொடங்கியது ஈருருளி பேரணி!

பிரித்தானியாவில் மாவீரர் துயிலும் இல்லம் அமைக்கும் பணி உலகத் தமிழர் வரலாற்று மையத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட வேலைத் திட்டமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கத்தில் இன்று மாவீரர்களின் நினைவு ஊர்தியும் ஈரூந்திப் பயணமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஈருருளி பேரணி  கோரின்ச் பார்க் அவென்யு (Gorringe Park Avenue, Mitcham CR4 2DD) என்னும் இடத்தில் காலை 11 மணிக்கு தொடங்கியுள்ளது.

மாவீரர்களின் நினைவேந்தி செல்லும் உணர்ச்சிமிக்க இப்பேரணியை தமிழீழ விடுதலைக்கான மாணவர் போராட்டத்தின் அரம்பகால முதல்வர் சத்திய சீலன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டுள்ளனர்.

ஈருருளி பேரணிசத்திய சீலன்பிரித்தானியாமாவீரர் துயிலும் இல்லம்
Comments (0)
Add Comment