பிள்ளையான் உட்பட நால்வருக்கும் சிறை நீடிப்பு!

சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்), ‘பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, ‘கஜன் மாமா’ எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் எம்.கலீல் ஆகியோருக்கு எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இவர்களை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் இன்று புதன்கிழமை ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலை நீடித்து நீதவான் உத்தரவிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜ சிங்கம், மட்டக்களப்பு புனித மரியாழ் தேவாலயத்தில் 25.12.2005 அன்று நடைபெற்ற நல்லிரவு ஆராதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொலை வழக்குசிறைநீதிபதிநீதிமன்றம்பிள்ளையான்வழக்கு
Comments (0)
Add Comment