குறித்த நால்வரையும் எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா இன்று உத்தரவிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், கடந்த 2005ஆம் ஆண்டில் மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கடந்த 11.10.2015 அன்று சிவநேசதுரை சந்திரகாந்தனை கைதுசெய்திருந்தனர்.
இதேவேளை, சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு பிணை கோரி, மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை விசாரணை செய்த மேல் நீதிமன்ற நீதிபதி சந்திராணி விஸ்வலிங்கம், எதிர்வரும் 18ஆம் திகதி வரை வழக்கினை ஒத்திவைத்தார்.