முல்லைத்தீவு புதுகுடியிருப்பு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. புதுகுடியிருப்பு மந்துவில் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையல் அறைக்குள் இருந்து சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
35 வயதான குறித்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுகுடியிருப்புப் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலை கோட்டை கடற்கரையில் அடையாளம் காணப்படாத ஆணொருவரின் சடலம்
சடலம் மீதான நீதவான் விசாரணைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதோடு திருகோணமலை பொலிஸார் சடலம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.