புதுக்குடியிருப்பில் இளம் பெண் கடத்தப்பட்டுள்ளார்

விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளியொருவர் நேற்றுக் காலை புதுக்குடியிருப்பில் வைத்து கடத்தப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்களே முன்னாள் பெண்போராளியான கைவேலி பகுதியைச் சேர்ந்த விசுவலிங்கம் வினோதினி(வயது 26) என்பவரைக் கடத்திச் சென்றுள்ளனர்.

தற்போது சிவில் பாதுகாப்பு படைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ள அவர் படையினரின் கண்காணிப்பில் இயக்கப்படும் சிறார்களிற்கான முன்பள்ளியொன்றில் கல்வி கற்பித்து வந்தார். நேற்றுக்காலை வழமை போலவே முன்பள்ளிக்கு சென்று கொண்டிருந்த அவரை இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்திருந்த நபர்கள் தாக்கிய பின் தமது மோட்டார் சைக்கிளில் தூக்கி சென்றுள்ளனர்.

மயக்கமுற்ற நிலையில் காலை வேளை குறித்த முன்னாள் போராளி கடத்தி செல்லப்பட்ட வேளை இலங்கை காவல்துறையும் அப்பகுதியில் பொதுமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இனந்தெரியாதஇயக்கம்கடத்தல்காலைநபர்நேற்றுபுதுக்குடியிருப்புபெண்போராளிமுன்னாள்விசுவலிங்கம்விடுதலைப்புலிகள்வினோதினி
Comments (0)
Add Comment