புத்தனின் பெயரால் சத்தமின்றி நடைபெறும் மெல்லக் கொல்லும் இனப்படுகொலையின் ஒரு அங்கமே தமிழர் நிலத்தில் திணிக்கப்படும் வெசாக் பண்டிகை. முன்னர் எப்பொழுதுமே தமிழர் நிலங்கள் வெசாக் பண்டிகையை கொண்டாடியதில்லை. இம்முறை இராணுவத்தினரின் வெசாக் வலயம் புத்த மதத்தினர் சுத்தமாக வசிக்காத யாழ்ப்பாணம் மட்டக்களப்பு போன்ற இடங்களில் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.
தமிழர்களையும் சிங்களவர்களாக மாற்றி பௌத்த மத விரும்பிகளாக மாற்றும் இனப்படுகொலையின் ஓர் அங்கமே புத்தரின் பெயரால் தமிழர் பகுதிகளில் இடம்பெறும் வெசாக் கொண்டாட்டங்கள். தமிழர்களை கொன்றுகுவித்துவிட்டு இப்போது தமிழையும் கொல்லத் தொடங்கிவிட்டனர்.
இதையும்விடக் கொடுமை என்னவெனில் தமிழர்கள் மத நல்லிணக்கம் பொழுதுபோக்கு என்ற பெயரில் இந்த வெசாக் கொண்டாட்டங்களில் பங்குபற்றுவது மற்றும் சமூகவலைத்தளங்களில் வெசாக் வாழ்த்துகளை பதிவிடுவதுமாகும்.
இதைவிடுத்து எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே புத்தனை வணங்கும் எத்தர்களால் கொன்றுகுவிக்கப்பட்ட எமது மக்களின் நினைவுப் பிரார்த்தனைகளில் பங்கெடுப்பதுடன் இது சம்பந்தமான பதிவுகளை உங்கள் சமூகவலைத்தளங்களில் பதிவுடுங்கள். அதன்மூலம் சிங்களத்திற்கும் சர்வதேசத்திற்கும் உங்கள் உணர்வுகளை பறைசாற்றுங்கள்.