நேற்று (2016-11-06) காலை பத்து மணியளவில் முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் அமைந்துள்ள மக்கள் தொடர்பகத்தில் நடைபெற்ற இச்செயற்றிட்டநிகழ்விற்கான பங்களிப்பினை அவுத்திரேலியாவில் வாழும் புலம்பெயர் அன்பர்கள் வழங்கியுள்ளனர்.
குறித்த நிகழ்வில், நாளாந்த உணவுத்தேவைக்கு இடர்படும் முப்பத்தாறு குடும்பங்கள் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கு அரிசியும், கர்ப்பிணி தாய் ஒருவர்க்கு ஊக்குவிப்பு பணமும் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
புலம்பெயர்ந்து வாழும் ஈழ அன்பர்களின் பணப்பங்களிப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் இச்செயற்றிட்டத்தின் முதலாம் கட்டமானது கடந்த 2014.11.20 ஆம் நாளன்று நடைபெற்றது.
தொடர்ச்சியாக ஆறு கட்டங்கள் நிறைவுற்ற நிலையில், இச்செயற்றிட்டத்தின் ஏழாம் கட்டத்திற்கான பங்களிப்பை புலம்பெயர்ந்து அவுத்திரேலியாவில் வசிக்கும் திருவாளர் கணேசராசா (குபேரன்) குடும்பம் மற்றும் திருவாளர் சிதம்பரகுமரன் குடும்பம் ஆகியோர் வழங்கினார்.
முப்பத்தாறு பயனாளிகள் உள்வாங்கப்பட்டு இந்நிகழ்வில் மொத்தமாக அறுநூறு கிலோ அரிசியும் கர்ப்பிணி தாய் ஒருவர்க்கு பண ஊக்குவிப்பும் வழங்கப்பட்டது.