புலிகளை ஒழிக்க முழுமையாக ஒத்துழைத்தோம்!

முப்­பது வரு­ட­கால யுத்தம்  துர­திஷ்­ட­வ­ச­மா­னது. புலிகளை  முற்­றாக ஒழிப்­ப­தற்­காக நாம் முழு­மை­யான ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­கி­யி­ருந்­தோ­மென பா­கிஸ்தான் பிர­தமர் நவாஸ் ஷெரிப் தெரி­வித்தார்.

பயங்­க­ர­வாதம் எமக்கு பொது­வான எதி­ரி­யாகும் எனச் சுட்­டி­க் காட்­டிய பிர­தமர் நவாஸ் ஷெரிப் தெற்­கா­சிய வல­யத்தில் கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஸ்திரத்­தன்மை அவ­சி­ய­மா­கின்­ற­தெ­னவும் குறிப்­பிட்டார். அத்­துடன் இலங்கை வர்த்­த­கர்கள் பாகிஸ்­தானில் பாரி­ய­ளவில் முத­லீ­டு­களை மேற்­கொள்­வ­தற்கும் அழைப்பு விடுத்­துள்ளார்.

லக்ஷ்மன் கதிர்­காமர் சர்­வ­தேச உற­வுகள் மற்றும் மூலோ­பாயக் கற்­கை­க­ளுக்­கான நிலையம், வௌிவி­வ­கார அமைச்சு ஆகி­ய­வற்றின் இணை ஏற்­பாட்டில் பாகிஸ்தான் மற்றும் இலங்­கைக்­கி­டை­யி­லான தொடர்­புகள் எனும் தலைப்பில் இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ள பா­கிஸ்தான் பிர­தமர் நவாஸ் ஷெரிப் விசேட உரை­யாற்­றி­யி­ருந்தார்.

கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்­டலில் நேற்று நடை­பெற்ற இந்­நி­கழ்வில் வௌிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன், பல்­வேறு நாடு­களின் இலங்­கைக்­கான தூது­வர்கள், இரா­ஜ­தந்­தி­ரிகள், அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சம­யத்­த­லை­வர்கள் உட்­பட பலர் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

இங்கு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்,

முன்னாள் வெளிவி­வ­கார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்­கா­மரின் நினை­வாக இந்தக் கல்­லூரி இயங்­கு­கின்­றது. லக்ஷ்மன் கதிர்­காமர் இந்த நாட்டின் வௌிவி­வ­கார அமைச்­ச­ராக பத­வி­வ­கித்த காலத்தில் சர்­வ­தே­சத்­திலும் உள்­நாட்­டிலும் மிக முக்­கி­ய­மான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தி­ருந்தார்.

பாகிஸ்­தா­னுக்கும் இலங்­கைக்கும் இடையில் வர­லாற்று ரீதி­யான நெருங்­கிய தொடர்­புகள் காணப்­ப­டு­கின்­றன. ஜன­நா­யக தலை­மை­களைக் கொண்ட இரு நாடு­களும் சமா­தானம் நிறைந்த சூழலில் இளையோர் சமூகம் ஆற்­றல்­மி­குந்­த­தாக உரு­வாக வேண்­டு­மென்­பதை இலக்­காக கொண்­டி­ருக்­கின்­றன.

இரு நாடு­களும் அடிப்­ப­டை­வாதம், பயங்­க­ர­வாதம் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து வௌியேறி பொரு­ளா­தா­ரத்தை வலு­வூட்­டு­வ­துடன் நிலை­யான கல்­வியை உறுதி செய்­வதில் கவனம் செலுத்­தி­யுள்­ளன. இந்த இலக்கை அடை­வ­தையே உய­ரிய நோக்­க­மாக கொண்­டி­ருக்­கின்­றன.

முப்­பது வரு­ட­கால யுத்த நிலை­மைகள் துர­திஷ்­ட­வ­ச­மா­னது. பயங்­க­ர­வா­தத்தை முற்­றாக ஒழிப்­ப­தற்­காக நாம் முழு­மை­யான ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­கி­யி­ருந்தோம். அனை­வ­ரி­னதும் ஏக ஒத்­து­ழைப்­பின்றி பயங்­க­ர­வாத்தை ஒழித்­து­வி­ட­மு­டி­யாது. எமது நாடு பத்­தாண்­டுகள் இரா­ணுவக் கட்­டுப்­பாட்டில் காணப்­பட்­ட­மையால் உட்­கட்­ட­மைப்பு முழு­மை­யாக பாதிக்­க­ப்பட்­டி­ருந்­த­தோடு இழப்­புக்­களும் நிகழ்ந்­தி­ருந்­தன.

அது­மட்­டு­மன்றி பயங்­க­ர­வா­தி­களின் செயற்­பா­டுகள் எமது நாட்டில் வெகு­வான பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன. குறிப்­பாக பழங்­குடி மக்கள் வசிக்கும் பகு­தி­களில் முகாம்­களை அமைத்த பயங்­க­ர­வா­திகள் தமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக அப்­ப­கு­தி­களில் முழு­மை­யான ஆதிக்­கத்தை செலுத்­தி­யி­ருந்­தனர். பொது­மக்­களை பாது­காக்க வேண்­டிய பொறுப்பு எமக்கு காணப்­பட்­டது. அதற்­காக பயங்­க­ர­வாதத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை தீவி­ர­மாக முன்­னெ­டுக்­க­வேண்­டி­யி­ருந்­தது.

இதன்­போது பயங்­க­ர­வா­திகள் தங்­கி­யி­ருந்த பகு­திகள் முற்­றாக அழிக்­கப்­பட்­டன. அவர்­க­ளுக்கு நிதி­யு­தவி உள்­ளிட்ட பல்­வேறு உத­வி­களை வழங்­கி­ய­வர்கள் ஆத­ர­வ­ளித்­த­வர்கள் ஆகி­யோரை சட்­டத்தின் முன் நிறுத்­த­வேண்­டிய தேவை ஏற்­பட்­டி­ருந்­தது. இரா­ணு­வத்­தி­ன­ரது தியாங்­களே நாட்டில் மீண்டும் சட்டம் ஒழுங்கு பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு உத­வி­யி­ருந்­தது.

மறு­பக்­கத்தில் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டுகள் தலை­தூக்­கு­வ­தற்கு அடிப்­ப­டையில் காணப்­படும் விட­யங்­களை ஒழிக்­க­வேண்­டி­யது மிக முக்­கி­ய­மா­ன­தா­க­வுள்­ளது. உண்­மை­யான ஜன­நா­ய­க­மா­னது மக்கள் ஏற்­றுக்­கொள்­வதன் அடிப்­ப­டை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றது. அது­வ­ரையில் உண்­மை­யான ஜன­நா­ய­கத்தை எட்­ட­மு­டி­யாது. இதுவே யதார்த்­த­மா­க­வுள்­ளது. ஜன­நா­ய­க­மா­னது பொரு­ளா­தார வளர்ச்­சிக்கும் கலா­சார செயற்­பா­டு­க­ளுக்கும் வாய்­ப்புக்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

எனது தலை­மை­யி­லான அர­சாங்கம் பொரு­ளா­தா­ரத்தில் மிக முக்­கி­யத்­துவம் வாய்ந்த முன்­னேற்றத்தை எட்­டி­யுள்­ளது. கடந்த ஏழு­வ­ரு­ட­மாக காணப்­பட்ட பாகிஸ்­தானின் மொத்த தேசிய உற்­பத்­தி­யா­னது மூன்­று­வீ­தத்தால் அதி­க­ரித்­துள்­ளது. அதே­நேரம் எனது அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­கா­லத்தின் முத­லி­ரண்டு வரு­டத்தில் மொத்த வரு­மா­ன­மா­னது 12.9சத­வீ­த­மா­கி­யுள்­ளது. சர்­வ­தேச அளவில் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆய்­வுகள், ஆலோ­ச­னைகள், ஆத­ர­வுகள் ஆகி­ய­னவே பொரு­ள­தா­ரத்தில் பாகிஸ்தான் தற்­போ­தைய நிலையை எட்­டு­வ­தற்கு கார­ண­மாக அமைந்­தி­ரு­கின்­றன. அத்­துடன் சர்­வ­தேச நிறு­வ­னங்­களும் உத­வி­களை வழங்­கி­யி­ருந்­தன.

எனது அர­சாங்கம் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை மட்டும் கருத்தில் கொள்­ளாது பிராந்­திய அபி­வி­ருத்­திக்கும் முக்­கி­யத்­துவம் அளித்­தி­ருந்­தது. அதற்­காக பிரந்­திய நாடு­க­ளுடன் உறு­தி­யான உற­வு­களை ஏற்­ப­டுத்­து­வ­தையும் சமா­தா­னத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கா­கவும் அதீத ஒத்­து­ழைப்­புக்­களை வழங்கி ஊக்­கு­வித்­தி­ருந்­தது.

பாகிஸ்­தா­னுக்கும் சீனா­வுக்கும் இடையில் மேற்­கொள்­ளப்­பட்ட பொரு­ளா­தார உடன்­ப­டிக்கை இதற்­கான சிறந்த உதா­ர­ண­மாக அமை­கின்­றது. இந்த உடன்­ப­டிக்­கை­யா­னது பல்­வகை உட்­கட்­மைப்புத் திட்­டங்­களைக் கொண்ட 46 பில்­லியன் டொலர் பெறு­ம­தி­யா­ன­தாகும். பாகிஸ்தான், ஆப்­கா­னிஸ்தான் துர்­கி­னிஸ்தான் இந்­தியா ஆகிய நாடு­க­ளுக்­கி­டை­யி­லான குழாய் வாயு திட்­டத்­தையும் ஊக்­கு­விக்­கின்­றது.

சமா­தா­ன­மது அனை­வ­ரி­னதும் ஒத்­து­ழைப்­புக்­க­ளுடன் ஒன்­று­பட்ட செயற்­பாட்­டின்­மூ­லமே எட்ட முடியும். தனியே பேச்­சு­வார்த்­தை­களால் அதனை அடைந்து விட­மு­டி­யாது. இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி பிர­த­ம­ராக தெரிவு செய்­யப்­பட்டு பத­வி­யேற்பு நிகழ்­வுக்கு அழைப்பு விடுத்­தி­ருந்­த­போது நான் அதில் பங்­கேற்­றி­ருந்தேன். இதன் விளை­வா­கவே இரு­நா­டு­க­ளுக்­கி­டை­யி­லான உறவு புத்­துயிர் பெற்று பேச்­சுக்கள் விஜ­யங்கள் என்­பன இடம்­பெற்று வரு­கின்­றன. விசே­ட­மாக இரு நாட்­டுக்கும் பொது­வான எதி­ரி­யாக காணப்­படும் வறு­மையை ஒழிப்­ப­தென்று முடிவு எட்­டப்­பட்­டது.

இதன்­தொ­டர்ச்­சி­யாக கடந்த மாதம் 25ஆம் திகதி இந்­தி­யப்­பி­ர­தமர் நரேந்­திர மோடி பாகிஸ்­தா­னுக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்தார். என்­னுடன் பல விட­யங்­களை பேசி­யி­ருந்தார். இவ்­வா­றான செயற்­பா­டுகள் இரு நாடு­க­ளுக்­கி­டையில் உற­வு­களை வலுப்­ப­டுத்­து­வ­தற்கு அவ­சி­ய­மா­கின்­றது. அதன்­பி­ர­காரம் இரு நாடு­க­ளுக்­கி­டையில் உற­வுகள் மீளவும் வலு­வ­டைந்­துள்­ளன. இரு நாடு­க­ளுக்­கி­டையில் பேச்­சு­வார்த்­தைகள் தொடர்ந்தும் இடம்­பெ­ற­வி­ருக்­கின்­றன. அதற்­கான திட்­ட­வ­ரை­வுகள் முன்­வைக்­கப்­பட்டு உயர் மட்­டத்­தி­லான பேச்­சுகள் தொடர்ந்தும் முன்­னெ­டுப்­பது குறித்து ஆரா­யப்­பட்டு வரு­கின்­றன.

பாகிஸ்­தானில் நிலை­நாட்­டப்­படும் அமை­தி­யா­னது பிராந்­தி­யத்தின் அமை­தியில் பாரிய செல்­வாக்கை செலுத்­து­கின்­றது. அது மிகவும் முக்­கி­ய­மா­ன­தா­கவும் உள்­ளது. பயங்­க­ர­வாதம் என்­பது எமக்கு பொது­வான எதி­ரி­யாகும். பிரந்­திய நாடு­களில் நிலை­யான சமா­த­ானத்­திற்கும் நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் பாகிஸ்தான் தனது முழு­மை­யான ஒத்­து­ழைப்­புக்­களை தொடர்ந்தும் வழங்கும். தொடச்­சி­யான பேச்­சுக்­களின் அடிப்­ப­டையில் தெற்­கா­சிய வல­யத்தில் கேந்­திர முக்­கி­யத்துவம் வாய்ந்த ஸ்திரத்­தன்மை அவ­சி­ய­மா­கின்­றது.

விசே­ட­மாக சார்க் கட்­ட­மைப்பில் உள்ள நாடு­க­ளி­டையே பேச்­சுக்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு சார்க் வலயம் உறு­தி­யா­ன­தாக அமைக்­கப்­ப­ட­வேண்டும். இந்து சமுத்­திர பிராந்­தி­யத்தில் நிலை­யான அமைதி நிலை­நாட்­டப்­ப­டு­வ­தோடு பிரந்­திய நாடு­க­ளுக்­கி­டை­யி­லான கடல்­வழி மார்க்­க­மான தொடர்­பு­களும் பாது­காப்­பான வகையில் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். இதற்­காக பிரந்­திய நாடு­களில் வசிக்கும் மக்­க­ளி­டையே நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்ப வேண்டும்.

தற்­போ­தைய நிலையில் பாகிஸ்தான் முத­லீ­டு­களை மேற்­கொள்­வ­தற்கும் வர்த்­தக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கு­மான ஏது­நி­லை­களை முழு­மை­யாக கொண்­டி­ருக்­கின்­றது. ஆகவே இலங்கை வர்த்­தக துறை­யினர் எமது நாட்டில் முத­லீ­டு­களை பாரி­ய­ளவில் மேற்­கொள்­ள­வேண்­மென இத்­த­ரு­ணத்தில் அழைப்பு விடு­கின்றேன்.

இலங்­கை­யி­லி­ருந்து ஏற்­று­மதி செய்­யப்­படும் பொருட்­க­ளுக்­கான விசேட சந்தை வாய்ப்­பினை முழு­மை­யான அளவில் ஏற்­ப­டுத்தித் தரு­வ­தற்கு நாம் தயா­ரா­க­வி­ருப்­ப­தோடு விசேட வரி­ச­லு­கைகள் விலக்­கு­களை வழங்குவதற்கும் தயாரகவிருக்கின்றோம். இது எதிர்காலத்தில் இருநாடுகளுக்கிடையிலாக உறவுகளை மேலும் வலுவடைவதற்கு வழிசமைக்கும்.

பாகிஸ்தான் சுதந்திரமடைந்தது முதல் ஆறுதசாப்த நெருக்கமான உறவுகளை இலங்கையுடன் கொண்டிருக்கின்றது. இரு நாட்டு மக்களிடையேயும் சகோதரப்பிணைப்புடைய உறவுகள் காணப்பட்டிருந்தன. அந்த நிலைமை தொடவேண்டுமென நான் விரும்புகின்றேன்.

சுதந்திர இலங்கையின் இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க பதவியேற்றதன் பின்னர் தனது உத்தியோக பூர்வமான முதலாவது விஜயத்தை எமது நாட்டிற்கே மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பதவியேற்றபின்னர் கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானுக்கு வருகைதந்து பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இரு நாடுகளிடையே உறவுகளை மென்மேலும் வலுப்படுத்துவதாகவே அமையும்.

1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு இலங்கையர்கள் வழங்கிய பாரிய ஆதரவினை என்றுமே மறக்க முடியாது. ஆகவே பாகிஸ்தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு சகல வழிகளிலும் உதவிகளை வழங்குவதற்கு தயாரவே உள்ளது. விசேடமாக இராணுவ, பொலிஸ் துறைக்கான உதவிகள், கூட்டுறவுகளை மேம்படுத்தல் ஆகியவற்றை தொடர்ந்தும் பாகிஸ்தான் வழங்கும் என்பதை இச்சந்தர்ப்பத்தில் உறுதியாக கூறுகின்றேன் என்றார்.

ஒத்துழைப்பைஒழிக்கபுலிகளைமுழுமையான
Comments (0)
Add Comment