பெரியபரந்தன் கிராமத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

பெரியபரந்தன் கிராமமக்களின் வாழ்வியல் மேம்பாடு மற்றும் உட்கட்டுமான அபிவிருத்தியில் அதிக கரிசனை கொண்டுள்ளதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் தெரிவித்துள்ளார்.

பெரியபரந்தன் கிராம மக்களின் முதன்மைத் தேவைகளில்  வீதிபுனரமைப்பு பணி தவிர்ந்த ஏனைய தேவைகளை நிறைவேற்றுவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பெரியபரந்தன் கிராமத்தில் பொதுநோக்கு மண்டப  நிர்மானப் பணியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்தோடு இப்பகுதிக்கு மின்சாரத்தினை வழங்குவதற்கான வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்ட அவர் இக்கிராமத்தின் அபிவிருத்தியில் நாம் தொடர்ந்தும் கரிசனையுடன் செயற்படுவோம் எனவும் குறிப்பிட்டார்.

யு.என்.ஹபிடாட் நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன் பெரியபரந்தன் கிராமத்திற்கான பொதுநோக்குமண்டபம் அமைக்கும் பணிநேற்று வடக்கு மாகாணசபை உறுப்பினர்  வை.தவநாதன்  அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. சுமார் 26 இலட்சம் ரூபா செலவில் இம்மண்டபம் அமைக்கப்படவுள்ளது.

பெரியபரந்தன் கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் நடராசாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கரைச்சி உறுப்பினர்களான மனோகரன் மற்றும் இராமச்சந்திரன் ஆகியோரும் கரைச்சிப் பிரதேசசெயலர் நாகேஸ்வரன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராமசேவையாளர் சிம்சன்போல் ஆகியோரும் அரச திணைக்களங்களின் பிரதிநிதிகளும் பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.

அபிவிருத்திதிட்டம்
Comments (0)
Add Comment