பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அதிகாரிகள் மெத்தனமாக செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை அதிகாரிகள் நிலைமாறு கால நீதி நிகழ்ச்சி நிரலை அர்த்தமுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதில்  மிகவும் மெதுவாகவே செயற்படுகின்றதாக  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், 39 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த  அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைத் வெளிப்படுத்தியுள்ளார்.
“எனினும், காணாமல் போனோருக்கான பணியகம் இப்போது கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் . இந்தப் பணியகம் தமது ஆணையை நிறைவேற்றும் வகையில்ஆற்றலைக் கட்டமைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை  குறித்த  பணியகம்,துரிதமாகச் செயற்பட்டு  காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு விரைவாக பதிலளிக்க ஆரம்பிப்பதை தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொறுப்புக்கூறல் மற்றும் உண்மையைக் கண்டறிதல் என்பன, நாட்டின் நீண்டகால உறுதித்தன்மை மற்றும் செழிப்புக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, மீண்டும் மரணதண்டனையை நடைமுறைப்படுத்தும் இலங்கையின்  திட்டம் மற்றும் இனவாத நோக்கிலான, சமூகங்களுக்கிடையிலான வன்முறைச் சம்பவங்கள் மீண்டும் நடப்பது குழப்பத்தை ஏற்படுத்துகின்ரதாகவும்  அவர் இதன்போது  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமர்வுஐநாநேற்றையதினம்பேரவைமிச்சேல் பசெலெட்அம்மையார்
Comments (0)
Add Comment