குறித்த கிராமத்தின் பிரதான வீதியாக காணப்படும் ஆனையிறவு – தட்டுவன்கொட்டி வீதி இன்று வரை புனரமைக்கப்படாமல் காணப்படுவதுடன், இதனூடாக மக்கள் பயணிக்க முடியாத நிலையும் காணப்படுகின்றது. இதேவேளை குறித்த கிராமத்திற்கான குடிநீர் வழங்கல் வேறு பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டு கரைச்சிப் பிரதேச சபையினால் விநியோகிக்கப்பட்டு வருகின்றபோதும் போதுமான குடிநீர் கிடைப்பதில்லை எனவும் அவ்வாறு தமக்குத் தேவையான குடிநீரைப் பெறுவதற்கு பரந்தன் அல்லது இயக்கச்சி ஆகிய இடங்களுக்குச் சென்றே பெறவேண்டியுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பிரதேச சபையினால் சீரான குடிநீர்விநியோகம் இடம்பெறுவதில்லை. குறிப்பாக, வீதி சீரின்மையால் குடிநீர் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. இவ்வாறு பிரதேச சபையின் குடிநீர் விநியோகம் சீராக இடம்பெறாமையினால் வரட்சி காரணமாக குடிநீர்த் தேவை அதிக-ரித்துக் காணப்படுகின்றது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.