தமிழ் மக்களுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்ட சகல விதமான ஒடுக்குமுறைகள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென 33 மாகாணசபை உறுப்பினர்கள் கோரியுள்ளனர். யுத்தம் இடம்பெற்ற காலம் மட்டுமன்றி அதற்கு முன்னைய காலங்களில் இடம்பெற்ற அடக்குமுறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்வாறு விசாரணை செய்வதன் மூலம் தமிழ் மக்கள் இனச் சுத்திகரிப்பிற்கு உட்பட்டார்களா இல்லையா என்பதனை நிர்ணயிக்க முடியும். கோயில்கள் இடிக்கப்பட்டமை, யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டமை, தேவாலயங்கள் மீது குண்டுத் தாக்குதல்கள் என பல்வேறு வழிகளில் தமிழ் மக்கள் துன்பங்களை அனுபவிக்க நேரிட்டது.சனத்தொகைப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எம்.கே.சிவாஜிலிங்கம், ஐங்கரநேசன். அந்தனி ஜெயநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆனந்தி சசிதரன், தம்பிராஜா குருகுலராசா உள்ளிட்ட 33 மாகாணசபை உறுப்பினர்கள் இவ்வாறு ஐ.நா மனித உரிமைப் பேரவைப் பேரவையிடம் கோரியுள்ளனர்.