மட்டக்களப்பில் இளைஞன் ஒருவன் தற்கொலை

மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனையில் குடும்பஸ்தர் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். சிரிகந்தராஜா ரவிச்சந்திரன் (24 வயது) என்பவரே நேற்று தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் மனைவி வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாகச் சென்றுள்ளதாகவும் இவரது இரு பிள்ளைகளையும் மனைவியின் தாயே பராமரித்து வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் செங்கலடி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

 வாழைச்சேனையில் 17 வயது யுவதி காணாமல் போயுள்ளார்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 17 வயதுடைய யுவதியைக் கடந்த 06.09.2014ம் திகதி முதல் காணவில்லை என்று அந்த யுவதியின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். ரினுசா என்ற யுவதியே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மஜீட் ஜூம்ஆ பள்ளிவாயல் வீதி றஹ்மத் நகர், நாவலடி, ஓட்டமாவடி என்ற முகவரியில் வசிக்கும் முஹைதீன் பாவா அச்சிமுஹம்மது (வயது 46) என்பரே தனது மகள் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாக கடந்த 07.09.2014ம் திகதி முறைப்பாடு செய்துள்ளார்.

மகளைப் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது தனது தொலைபேசி இலக்கமான 0773554841 இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு காணாமல் போன யுவதியின் தந்தை பொது மக்களிடம் கேட்டுள்ளார்.

ஏறாவூர்ஒருவர்கழுத்தில்குடும்பஸ்தர்சுருக்கிட்டுசெய்துள்ளதாகதற்கொலைதெரிவித்தனர்பொலிசார்மட்டக்களப்புமுறக்கொட்டான்சேனையில்
Comments (0)
Add Comment