மட்டக்களப்பில் டெங்கு நோயால் ஆறு பேர் மரணம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் டெங்கு நோய் காரணமாக 06 பேர் உயிரிழந்ததுடன், 2,490 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டதிருந்தாக மாவட்ட தொற்றுநோயியல் வைத்திய நிபுணர், வைத்தியர் தர்சினி முருகுப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் காரணமாக 04 பேர் உயிரிழந்ததுடன், 1,455 பேர் பாதிக்கப்பட்டனர்.மாவட்டத்திலுள்ள 20 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இப்பிரிவிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இதற்கு அடுத்ததாக கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 240 டெங்கு நோயாளர்களும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 182 பேர் டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டனர்.
2014ஆம் ஆண்டு இம்மாவட்டத்தில் டெங்கு நோய் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்ததுடன், 1035 பாதிக்கப்பட்டனர். 2014ஆம் ஆண்டில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அடையாளம் காணப்பட்டனர். இப்பிரிவுகளில் 588 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
2014ஆம் ஆண்டை விட, கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
ஆறுடெங்குநோயால்பேர் மரணம்மட்டக்களப்பில்
Comments (0)
Add Comment