குறித்த பகுதிகளுக்கு அவர் நேற்று திங்கட்கிழமை சென்று பார்வையிட்டதோடு, பிரதேச மக்களின் குறைகளையும் கேட்டறிந்து கொண்டார். இந்த இரண்டு கிராமங்களிலும் உள்ள உள் வீதிகளில் 90 வீதமானவை போக்குவரத்திற்கு உகந்ததாக காணப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், அவ்வீதிகள் ஊடாக அவசர சந்தர்ப்பங்களில் நோயாளர்களை கொண்டு செல்லவும் முடியாத நிலையில் உள்ளதாகவும் கூறினார்.
மேலும், இந்த கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஓலைக் குடிசைகளிலும், பூர்த்தி செய்யப்படாத வீடுகளிலும் வாழ்ந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார். இந்த விவகாரம் தொடர்பில் மாநகர சபை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியிருந்த போதிலும், இவற்றை சீர் செய்வதற்குரிய நிதி போதுமானதாக இல்லை என்று பதிலளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் அடுத்த நாடாளுமன்ற அமர்வு நாட்களில் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் இது குறித்து தெளிவுபடுத்தி தேவையான வசதிகளை செய்து கொடுப்பதாக சின்ன ஊரணி மற்றும் காந்தி ஆகிய கிராம மக்களிடம் அவர் உறுதியளித்துள்ளார்.