நேரக் கணிப்புக் குண்டு மூலமே, இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு குற்றத்தடயவியல் பிரிவு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குண்டுவெடிப்பில் அலுவலகத்துக்கு சிறிதளவான சேதமும் ஏற்பட்டுள்ளது.
இன்று (12) அதிகாலை 3.50 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற கட்சி அலுவலகத்துக்குச் சென்ற காத்தான்குடி பொலிஸார் ,விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர், மட்டக்களப்பு குற்றத் தடயவியல் பிரிவினர் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேற்படி கட்சி அலுவலகத்தில் வெடிக்காத நிலையிலும் சில நேரக் கணிப்புக் குண்டுகள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட ஏனைய 9 குண்டுகளும் வெடித்திருந்தால் அப்பகுதியில் பாரிய சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்