மட்டு மோட்டார் சைக்கில் விபத்தில் மூதாட்டி பலி!

மட்டக்களப்பு, செங்கலடியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூதாட்டியொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற இவ்விபத்தில் செங்கலடி, பதுளை வீதியைச் சேர்ந்த 70 வயதுடைய சந்தனம் தங்கராசா என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டிலிருந்து கடைக்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சென்ற மூதாட்டியை செங்கலடியிலிருந்து பதுளை வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிளொன்று மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அயலவர்கள் தெரித்தனர்.
சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இதேவேளை,சந்தேகநபரை கைது செய்வதற்காக ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் சீ.சீ.ரி.வி கமராவின் உதவியை நாடியுள்ள ஸ்ரீ ஏறாவூர்ப் பொலிஸார், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கலடிபலிபோலீஸ்மட்டக்களப்புமூதாட்டிவிசாரணைவிபத்து
Comments (0)
Add Comment