முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் மதவாளசிங்கன் குளத்திற்கு அருகில் சட்டத்துக்கு முரணாக புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலையை மூட பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு அனுமதி வழங்க வேண்டாமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது
இந்தவிடயம் குறித்து மேலும் தெரியவருகையில்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று காலை இடம்பெற்றது இதன்போது புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் புதிதாக ஒரு மதுபான சபை கட்டப்பட்டுவருதற்கு மக்கள் எதிர்பு தெரிவித்துள்ளார்கள் மக்கள் மற்றம் மக்கள் அமைப்புக்கள் கையெழுத்துவைத்து கடிதம் அனுப்பியுள்ளார்கள் என்று வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் அவர்களினால் எடுத்துரைக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான அனுமதி யார் கொடுத்துள்ளார்கள் என்பதையும் சபையில் கேட்டுள்ளார்.
மதுபான சாலை கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது அதற்கு முன்னரே அந்த வீதிக்கு கோம்பாவில் பார்வீதி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது இது யார் பெயர் வைத்துள்ளார்கள் ஏற்கனவே கோம்பாவில் பகுதியில் மதுபான சலை ஒன்று உள்ளது அது இருக்க இன்னும் ஒன்று அதே கிராமத்தில் திறப்பதற்கான அனுமதி யார் கொடுத்தார்கள் அவ்வாறு கொடுத்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று து.ரவிகரன் அவர்கள் ஆதாரத்துடன் முன்வைத்துள்ளார்.
குறித்த மதுபான சாலைக்கு 500 மீற்றர் தூரத்திற்குள் இரண்டு கோவில்கள் உள்ளன என்றும் குடியிருப்புக்கு மத்தியில் இந்த பார் கட்டப்படுவது யாழ்ப்பாணத்தில் வாள்வொட்டு கலாச்சாரம் இருந்து வருகின்றது என்பதை தாண்டி புதுக்குடியிருப்பிலும் வாள்வொட்டு கலாச்சாரம் தொடங்கியுள்ளமையினை அறியமுடிகின்றது இவ்வாறான நிலையில் மக்கள் மத்தியில் ஏன் மதுபான சாலைகள்?
இது தொடர்பில் பிரதேச செயலாளர் ம.பிரதீபன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் குறித்த பகுதியில் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்த பகுதியில் உணவு மற்றம் தங்கும்மிடம் றெஸ்ரோரண்டுக்கு விண்ணப்பித்து அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது பின்னர் அந்த நிறுவனம் மதுபானத்தினை அதில் விற்பதற்கு சமர்பித்துள்ளார் அது தொடர்பான சிபார்சினை பெற்றுத்தரச்சொல்லி கொழும்பில் இருந்து கடிதம் பிரதேச செயலகத்திற்கு கிடைத்துள்ளது அந்த சிபார்சினை கிராம அலுவலகரிடம் நான் பெற்றுத்தரும்படி கோரியுள்ளேன் அதில் சொல்லப்பட்டுள்ளமை 500 மீற்றர் தூரத்தில் கோவில் பாடசாலை அமையாத காரணத்தாலும் ஏற்கனவே பொதுமக்களிடம் இருந்து இதுதொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது என்றும் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி அதிபர் மற்றும் பற்றிமா ஆலயத்தின் பங்குத்தந்தை ஆகியோர் இதில் மதுபான சாலை அமைக்கமுடியாது என்று சிபார்செய்துள்ளார்கள் அந்த தகவலையும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள் என்ற கடிதத்தினையும் நாங்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம்.
அதற்கான அனுமதிகொடுங்கள் என்று பிரதேச செயலத்தினால் அனுப்பப்படவில்லை என்று பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கோம்பாவில் பகுதியில் கோம்பாவில் பார் வீதி என்று யார் பெயர் போட்டது என எழுப்பப்பட்ட கேள்விக்கு இதுதொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குள் வருவதால் அதுதொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படுவதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் செ.பிறோமகாந் தெரிவித்துள்ளார்
இதேவேளை கரைதுறைப்பற்று பிரதேசத்தில் மதவாளசிங்கன் குளத்திற்கு அருகில் புதிதாக ஒரு மதுபான சாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது இந்த மதுபான சாலை யாருடையது யார் இதற்கு அனுமதி கொடுத்தது என்பது தொடர்பில் 09.07.18 அன்று நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர் த.அமலன் அவர்களினால் கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு பிரதேச செயலாளர் யாரிடமும் அனுமதி பெறப்படாமல் இயங்குவதாக தெரிவித்துள்ளார்.
உடனடியாக மூடுவதற்கான நடவடிக்கையினை எடுக்கும்படி இணைத் தலைவரர்களில் ஒருவரான காதர் மஸ்தான் அவர்களால் முல்லைத்தீவு மாவட்ட பொலீஸ் தலைமை அதிகாரியிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது