மனித புதைகுழி அகழ்வுப் பணியில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள்

மன்னார் ச.தொ.ச விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 8 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த அகழ்வுப் பணியில்  யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களும் பயிற்சி நிலை வைத்திய அதிகாரிகளும் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில்  8 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த அகழ்வு பணியில் , விசேட சட்ட வைத்திய நிபுனர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினர், விசேட தடயவியல் நிபுணத்துவ பொலிஸார் , மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள்,சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை இந்த   அகழ்வுப் பணிகளில் மனித வளம் குறைவாக காணப்பட்டதை அடுத்து   யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களும் பயிற்சி நிலைய வைத்திய அதிகாரிகளும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அகழ்வுமன்னார்மாணவர்கள்யாழ் பல்கலைகழகம்
Comments (0)
Add Comment