Designed by Iniyas LTD
மனித புதைகுழி அகழ்வுப் பணியில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள்
மன்னார் ச.தொ.ச விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 8 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த அகழ்வுப் பணியில் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களும் பயிற்சி நிலை வைத்திய அதிகாரிகளும் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் 8 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த அகழ்வு பணியில் , விசேட சட்ட வைத்திய நிபுனர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினர், விசேட தடயவியல் நிபுணத்துவ பொலிஸார் , மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள்,சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை இந்த அகழ்வுப் பணிகளில் மனித வளம் குறைவாக காணப்பட்டதை அடுத்து யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களும் பயிற்சி நிலைய வைத்திய அதிகாரிகளும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


