மன்னாரில் தமிழ் இளைஞரை காணவில்லை!

மன்னார் தேட்டவெளி ஜோசேப்வாஸ் நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 14ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக குறித்த இளைஞனின் பெற்றோர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மன்னார் விடத்தல் தீவை பிறப்பிடமாகவும், தேட்டவெளி ஜோசவாஸ் நகரை வதிவிடமாகவும் கொண்ட பூபாலசிங்கம் அருள் ராஜ் வயது (33) என்ற இளைஞரே காணாமல் போயுள்ளதாக பெற்றோர் கடந்த திங்கட்கிழமை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த இளைஞன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இளைஞர்காணவில்லைதமிழர்மன்னார்
Comments (0)
Add Comment