மன்னார் மனித புதைகுழி மீண்டும் அகழப்படுகின்றது

மன்னார் – திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழி இன்று வியாழக்கிழமை  (16-01-2014)  மீண்டும் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

குறித்த மனித  புதைகுழியில் இருந்து இதுவரை 30 பேரின் மண்டையோடு மற்றும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். மன்னார் – திருக்கேதீஸ்வர ஆலய பகுதியில் வீதி நீர்குழாய் திருத்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அங்கு மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவில் சட்ட வைத்திய அதிகாரிகள் முன்னிலையில் குறித்த இடத்தில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு பல மனித மண்டையோடுகள் மீட்கப்பட்டுள்ளன.  டிசம்பர் 20ம் திகதி தொடக்கம் அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற நிலையில் இன்று மீண்டும் அகழ்வுப் பணி தொடரப்படவுள்ளது.

புதைகுழிமன்னார்
Comments (0)
Add Comment