மன்னார் ஸ்ரீ போலீசாருக்கு கடல் கண்காணிப்பிற்கு இரு விசைப்படகுகள்!

ஸ்ரீலங்கா  பொலிசாரின் கடல் கரையோரக் கண்கானிப்பிற்காக முதல் தடவையாக மன்னாரில் நேற்றைய தினம் இரு விசைப்படகுகள் வழங்கி வைக்கப்பட்டன.

மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் கரையோரக் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக கிலேயே மேற்படி படகுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த படகுகள் இரண்டும் மன்னார் பொலிசாரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வுகள் நேற்றுக் காலையில் மன்னார் கடற் கரையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் 18 அடி நீள விசைப்படகுகள் இரண்டினை மன்னார் பொலிஸ் நிலையப் பொலிசாரிடம் வன்னி மாவட்டப் பிரதிப்பொலிஸ் மா அதிபர் வழங்கி வைத்தார். இலங்கையின் பொலிஸ் வரலாற்றில் முதல் தடவையாக கடற்கலங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்விற்காக மன்னார் வந்த பொலிஸ் அதிகாரிகள் கடலிற்குச் செல்லும் நோக்கில் மீனவர்களின் நார் இழைப்படகுகள் 10 நேற்றைய தினம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கடற்கலங்கள்கடல்கண்காணிப்புமன்னார்விசைப்படகுஸ்ரீ போலீஸ்
Comments (0)
Add Comment