மருத்துவப்பரிசோதனை செய்ய 800 போராளிகள் தயார்!

தங்களை மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்குவதற்கு 800 முன்னாள் போராளிகள் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக போராளிகள் அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்பேச்சாளர் என்று தெரிவிக்கும் துளசி இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்துள்ளார்.
தாங்கள் யாரையும் குற்றம் சுமத்தவில்லை.
தங்களுக்கு ஊசி ஏற்றப்பட்டதாக உறுதிப்படுத்தவும் இல்லை.
ஆனால் இந்த விடயத்தில் ஆழ்மட்டத்துக்கு சென்று பரிசோதனை செய்து உண்மை கண்டறியப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கில ஊடகம்இரசாயனம்ஊசி மருந்துபோராளிகள் அமைப்புமருத்துவப்பரிசோதனைமுன்னாள் போராளிகள்
Comments (0)
Add Comment