தேயிலை தொழிற்சாலையில் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கவில்லை. “குறிப்பாக, மலசலகூட வசதி, குடிநீர் வசதி, இரவு நேரத்தில் தங்கி தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு தங்குமிட வசதி என்பன செய்து கொடுக்கவில்லை. “அத்தோடு, தோட்டத்தில் உள்ள அம்பியூலன்ஸ் வண்டி பல வருடகாலமாக திருத்தப்படாமையால் வைத்தியசாலைகளுக்கு நோயாளர்களை ஏற்றிச்செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்றனர்.
இந்தப் போராட்டம் தொடர்பில் மலையக மக்கள் முன்ணனி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், தோட்ட நிர்வாகத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து, தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு செய்யவேண்டிய விடயங்களை உடனடியாக செய்துகொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதன் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.