மாங்குளத்தில் பாரிய விபத்து! 14 பயணிகள் படுகாயம் 15 மாடுகளும் பலி

யாழ்ப்பாணத்தில் இருந்து மொரட்டுவை நோக்கிப் பயணித்த பேரூந்து ஒன்று ஏ9 வீதியில் கொல்லர்புளியங்குளம் பகுதியில் வீதியைக் கடந்த மாட்டுப் பட்டியுடன் மோதுண்ட விபத்தில் பேரூந்தில் பயணித்த 14 பயணிகள் படுகாயமடைந்த்தோடு 15 மாடுகள் உயிரிழந்து 10 மாடுகள் படுகாயமடைந்த்து.
யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்றுமாலையில் மொரட்டுவை நோக்கி புறப்பட்ட பேரூந்து இரவு 9.30 மணியளவில் மாங்குளத்தினைத் தாண்டி கொல்லர்புளியங்குளம் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தவேளையில் திடீரென வீதியினைக் கடந்த ஓர் மாட்டு பட்டியின்மீது மோதித்தள்ளியது.
இவ்வாறு மோதித்தள்ளிய விபத்தினில் பேரூந்தினில் பயணித்த 14 பயணிகள் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மாங்குளம் வைத்தியசாலைக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாங்குளவைத்தியசாலை ஊழியர்கள் நோயாளர்காவு வண்டி சகிதம் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்றனர்.
குறித்த விபத்தினில் படுகாயமடைந்தவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேவேளை இவ்விபத்தினில் 15 மாடுகள் உயிரிழந்த்தோடு 10 மாடுகளும் படுகாயமடைந்த நிலையில் வீதியில் கிடக்கின்றன. படுகாயமடைந்த மாடுகளிற்கான சிகிச்சை தொடர்பாகவும் கால் நடை வைத்தியரின் உதவி நாடப்படுகின்றது. குறித்த விபத்து தொடர்பினில் கனகராயன்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சிபடுகாயம்பயணிகள்பலிமாங்குளம்மாடுகள்யாழ்ப்பாணம்விபத்து
Comments (0)
Add Comment