இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது, இரண்டாவது போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இந்த தொடரின் மூலம் புதிய சாதனையை படைக்க கோஹ்லிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் அவர் 14 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 2 சதம், 6 அரைசதம் உட்பட 769 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
இப்பட்டியலில் தென் ஆப்ரிக்க வீரர் டுபிளசி 814 ஓட்டங்களுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து தலைவர் ஜோ ரூட் 785 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
டுபிளசி சாதனையை முறியடிக்க இன்னும் 45 ஓட்டங்கள் மட்டுமே கோஹ்லிக்கு தேவையாக இருக்கும் நிலையில் இலங்கை தொடரில் சாதனையை நிகழ்த்துவார் என தெரிகிறது.