மீனவர் பிரச்சனை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற மக்களை தடுத்து நிறுத்திய மர்ம நபர்கள்

வடபகுதி மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க, யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த மன்னார் மக்களை, ஏற்றிச்சென்ற பஸ் சாரதிக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்து, அந்தப் பயணத்தை மர்மநபர்கள் தடுத்து நிறுத்தியுள்ளார். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து யாழ். நகரில் நேற்று காலை 10 மணிக்கு போராட்டம் நடத்தியது. வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களும் சேர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்தை யாழ்ப்பாணத்திலும், அதேபோன்று சிலாபத்திலும் நேற்று நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்திற்காக நேற்று மன்னார், பள்ளிமுனை மற்றும் முள்ளிக்குளம் உள்ளிட்ட பல கிராமங்களிலுள்ள மக்கள் இரண்டு பஸ்களில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேளையில் குறித்த இலுப்பைக்கடவை பகுதியில் வைத்து பஸ் சாரதிக்கு தொலைபேசியூடாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.குறித்த தொலைபேசி மிரட்டலில் யாழ்ப்பாணத்திற்கு செல்லும் பயணத்தை உடன் நிறுத்தி மன்னார் திரும்பவேண்டும், அப்படி திரும்பாவிட்டால் பஸ்ஸை எரிக்கப் போவதாகவும், பஸ் சாரதி மற்றும் நடத்துனரைக் கொலை செய்வோம் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்கள் யாழ்ப்பாணம் நோக்கிய பயணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் பயண ஒழுங்கு தடைப்பட்டதை அடுத்து குறித்த பயணிகளுக்கும் சாரதி நடத்துனர்களுக்கும் இடையில் ஏற்ப்பட்ட பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வட மாகாண மீன்பிடி அமைச்சர் டெனிஸ்வரன் மற்றும் அருட்தந்தை நேரு, இலுப்பைக்கடவை பொலிசார் ஆகியோர் குறித்த விடயம் தொடர்பாக சாரதி நடத்துனருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.எனினும் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் காணப்படாத நிலையில் ஆர்ப்பாட்டத்திற்காக கலந்துகொள்ள சென்றவர்கள் மீண்டும் மன்னார் திரும்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்குசென்றதடுத்துநிறுத்தம்மக்கள்
Comments (0)
Add Comment