மீன் பிடிக்கச் சென்றவரின் உடற்பாகங்கள் ஆற்றில் மீட்பு

மட்டக்களப்பு-சித்தாண்டி பகுதியிலிருந்து காட்டுப்பாலம் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவரின் உடற்பாகங்கள் இன்று ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இந்த மீனவர் கடந்த 26ம் திகதி மீன்பிடிப்பதற்காக காட்டுப்பாலம் ஆற்றிற்கு சென்ற பின்னர் வீடு திரும்பவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யட்டிருந்தது.

இதன் பிரகாரம் கடந்த இரண்டு நாட்களாக வாழைச்சேனை பொலிஸாருடன் பிரதேச மக்களும் காணாமற்போன மீனவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலைமையின் கீழ் மீனவரின் அவயவங்கள் ஆற்றிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். முதலை கடித்து மீனவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதுடன், சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பித்தக்கது.

ஆறுஉடற்பாகம்காட்டுப்பாலம்சித்தாண்டிபகுதிமட்டக்களப்புமீட்புமீன்பிடி
Comments (0)
Add Comment