குறித்த நிகழ்வு காலையில் யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் செந்தில்நாதன் தலமையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் இப் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள 100 வீடுகளினை அமைக்கும் பணியினை பொறுப்பேற்றிருக்கும் ஸ்ரீலங்கா இராணுவத்தின் சார்பில் மாவட்ட கட்டளைத் தளபதி மகேஸ் சேனாநாயக்கா , மாவட்ட மேலதிக அரச அதிபர் ஆகியோருடன் வீட்டின் உரிமையாளர்களும் இணைந்து நாட்டிவைத்தனர்.
இதன்பிரகாரம் இப்பகுதியில் அமைக்கப்படவுள்ள வீடுகள் விரைவாக இரண்டு மாத காலப்பகுதியினில் நிறைவு செய்ய எண்ணி இதற்கான மூலப்பொருட்களை தங்கு தடையின்றிப் பெறுவதற்கு மாவட்டச் செயலகம் ஆவண செய்துள்ளதாக மேலதிக அரச அதிபர் தெரிவித்தார்.