முதலமைச்சர் நடுநிலை தவறியுள்ளார்: டெனிஸ்வரன்

நீதியரசராக இருந்த வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நீதியினை சரியாக வழங்காமல் நடுநிலை தவறியுள்ளதாக வட. மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட.மாகாணத்தில் நிலவும் குழப்ப நிலை தொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “வட. மாகாணத்தில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் சரியான முறையில் அறிந்து கொள்ள வேண்டும். இதற்கு பின்னால் அரசியல் இலாபம் தேடுவதற்காக பலர் காணப்படுகின்றனர்.

வடக்கில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையானது தென்னிலங்கை மக்கள் மத்தியில் நாங்கள் ஆட்சி செய்ய தெரியாதவர்கள் என்பதை மீண்டும் நிலைநிறுத்துவதை உறுதிப்படுத்துவதாக அமையும்.

எனவே தற்போதுள்ள பிரச்சினையை யாராக இருந்தாலும் சரியாக இனங்கண்டு, யார் பிழை விட்டிருந்தாலும் அதனை சீர் செய்ய வேண்டும்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருக்கின்ற நான்கு கட்சிகளும் தமது அரசியல் சுய இலாபங்களுக்காக இயங்காது பொது மக்களின் நலனுக்காக செயற்பட வேண்டும்“ என்று தெரிவித்துள்ளார்.

சி.வி. விக்னேஸ்வரன்டெனிஸ்வரன்
Comments (0)
Add Comment