முன்னாள் போராளியொருவர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினாரால் கைது

மன்னார் நீதிமன்றத்தில் வைத்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 14/11/2014 முன்னாள் போராளியொருவர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைகளுக்காக சென்றிருந்த நிலையினில் அவர் கைதாகியுள்ளார்.வவுனியாவில் இருந்து வருகை தந்த பயங்கரவாத புலனாய்வுத்துரையினர் அவரை கைது செய்து வவுனியாவிற்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

மன்னார் பணங்கட்டுக்கோட்டு கிராமத்தைச் சேந்த 5 பிள்ளைகளின் தந்தையான தங்கத்துரை ஜெயின்ஸ் (வயது-38) என்பவரே கைது செய்யப்படடுள்ளார்.

குறித்த நபருக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் முன்னர் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணைக்காக அவர் நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்திற்கு சென்றிருந்தார். விசாரணை நிறைவடைந்து வீடு திரும்புவதற்காக நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வந்த போது வெளியில் நின்றுக்கொண்டிருந்த பயங்கரவாத புலனாய்வுத்துரையினர் அவரை கைது செய்து வவுனியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கடந்த 20 வருடங்களுக்கு முன்பே புலி இயக்கத்தில் இணைந்திருந்ததாகவும் பின்னர் திருமணமாகி குடும்ப வாழ்வில் ஈடுபட்டு வந்திருந்தாக தெரியவருகின்றது.

கைதுதடுப்புநபர்நீதிமன்றம்பயங்கரவாதபிரிவினர்புலனாய்வுத்துளைபோராளிமன்னார்முன்னாள்வழக்குவவுனியாவிசாரணைவீடு
Comments (0)
Add Comment