முருகன் உள்ளிட்ட எழுவரையும் விடுவிக்கக்கோரி தாயகத்தில் போராட்டம்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்காக தாயகம் உட்பட இலங்கையில் பத்து லட்சம் கையெழுத்து போராட்டம் நடைபெறவுள்ளது.

முருகனின் தாயார் வெற்றிவேல் சோமணி அவர்கள் கிளிநொச்சியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்து இதனை தெரிவித்துள்ளார். ஆயுள் தண்டனை காலம் நிறைவடைந்த பின்னரும் நீண்ட காலமாக குறித்த ஏழு பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விடுதலைக்காக  தாயகத்திலும் இலங்கையிலும் போராட்டங்கள் நடக்கவில்லை. அத்துடன் அரசியல் தரப்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையிலேயே இந்த கையெழுத்து திரட்டும் போராட்டத்தினை ஆரம்பித்திருப்பதாக  அவர் கூறியுள்ளார்.

உட்படஎழுவரையும்போராட்டம்முருகன்விடுவிக்ககோரி
Comments (0)
Add Comment