முல்லையில் கடும் வரட்சியால் 243 குடும்பங்கள் பாதிப்பு!

தற்போது நிலவி வரும் கடும் வரட்ச்சி காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 243 குடும்பங்களைச் சேர்ந்த 864 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிலேயே இந்த வரட்ச்சி அதிகமாக காணப்படுவதோடு அப்பகுதியிலேயே 243 குடும்பங்களைச் சேர்ந்த 864 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான குடிநீர் வழங்குவதற்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவர்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுவருவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலை தகவல்கள் தெரிவிக்கின்றன

ஒட்டிசுட்டான்குடும்பங்கள்தண்ணீர்தாயகம்பாதிப்பு.மக்கள்முல்லைத்தீவுவரட்சி
Comments (0)
Add Comment