முல்லையில் காட்டு யானைகளின் அட்டகாசம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துஜயன்கட்டு, ஜீவநகர் முத்துவிநாயகபுரம், தட்டயர்மலை, சாளம்பன், அம்பகாமம், மாங்குளம் பனிக்கன்குளம், கரிப்பட்டமுறிப்பு உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  யுத்தத்தினால் உடமைகளை இழந்து மீள்குடியேறி பலத்த துன்பங்களின் மத்தியில் தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதாகக் குறிப்பிட்ட இப்பகுதி மக்கள், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் செய்யும் விவசாயத்தை காட்டு யானைகளும் பல தடவை அழித்து நாசப்படுத்தியுள்ளதாகக் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதற்கான நட்டஈடுகளும் கிடைப்பதில்லை எனவும் தமது விவசாயத்தை அழித்து வந்த காட்டு யானைகள் தற்பொழுது மக்களையும் தாக்க ஆரம்பித்துள்ளதாகவும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் யானைகளின் அட்டகாசத்தால் இரவு வேளையில் வீடுகளில் தங்குவதற்கு கூட அச்சமாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அட்டகாசம்ஒட்டுசுட்டான்காட்டுகோரிக்கைநடவடிக்கைபிரதேசம்மக்கள்மாவட்டம்முத்தையன் கட்டுமுல்லைத்தீவுயானை
Comments (0)
Add Comment