முழங்காவில் பிரதேசத்தில் 26 இலட்சம் ரூபா செலவில் கமநல சேவை நிலையம்

கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் 26 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட கமநல சேவை நிலையத்தை சிறீலங்கா விசேட கருத்திட்ட அமைச்சர் சந்திரசேன அவர்கள் நேற்று திறந்து வைத்ததுள்ளார்

மீள்குடியேற்றத்திற்கு முன்னர் சிறீலங்கா காவல் நிலையமாக செயற்பட்ட இந்த கமநல சேவைகள் நிலையத்தை இந்தப் பிரதேச விவசாயிகளின் கோரிக்கைகளை அடுத்து, பொலீஸாரிடமிருந்து பெறப்பட்டு  26 இலட்சம் ரூபா செலவில் இந்த கட்டிடம் புனரமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட கமநல சேவை அபிவிருத்தி உதவி ஆணையாளர்  தயாரூபன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்  விசேட கருத்திட்ட அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கமநல சேவைகளுக்குப் பொறுப்பான பிரதி அமைச்சருமான எஸ்.எம்.சந்திரசேன, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வீரசிங்க, வட மாகாண கமநல சேவைத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன், பூநகரி பிரதேச செயலாளர் சத்தியசீலன், பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர் காசிம், பூநகரி பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் சேனாதிபதி சில்வா, கமக்கார அமைப்புகளின் தலைவர்கள், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

கமநலசேவை நிலையம்
Comments (0)
Add Comment