ஒரு குழந்தையின் தந்தையான 27 வயதுடையவரான புதுக்குடியிருப்பைச் சேர்ந்த எம்.தயாபரன் என்பவரே இவ்வாறு பலியானவராவார். இச்சம்பவம் நேற்று முன்தினமிரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொக்கட்டிச்சோலையிலிருந்து வந்த துவிச்சக்கர வண்டி கல்முனையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் ஸ்தலத்திலேயே பலியானார். மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து வந்தவர் மற்றும் துவிச்சக்கர வண்டியில் வந்தவரும் படுகாயமடைந்துள்ளனர். காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.