யாழில் காணிகள் விடுவிப்பின் 2 ஆம் கட்டம்

யாழ்.மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட காணிகள் விடுவிப்பின் 2 ஆம் கட்டமாக 590 ஏக்கர் காணிகள் இன்று  விடுவிக்கப்பட்டுள்ளதுடன்  அதனை மக்களும் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

அதன்படி தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட காங்கேசன்துறை தெற்கு (ஜே – 235 கிராம அலுவலர்), பளை வீமன் காமம் வடக்கு (ஜே – 236 கிராம அலுவலர்), பளை வீமன்காமம் தெற்கு (ஜே – 237 கிராம அலுவலர்), கட்டுவன் (ஜே – 238 கிராம அலுவலர்), தென்மயிலை (ஜே – 240 கிராம அலுவலர்), வறுத்தலைவிளான் (ஜே – 241 கிராம அலுவலர்), தையிட்டி தெற்கு (ஜெ – 250 கிராம அலுவலர்), பலாலி தெற்கு (ஜே – 252 கிராம அலுவலர்) ஆகியவற்றின் காணிகளும் கோப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட வளலாய் (ஜே – 284 கிராம அலுவலர்) காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.

அனுமதிஇரண்டாம்உயர்கட்டம்காணிகள்பாதுகாப்புமாவட்டம்யாழ்ப்பாணம்வலையம்வழங்கல்விடுவிப்பு
Comments (0)
Add Comment