முன்னர் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் தக்காளி தற்போது 160 ரூபாயாகவும் 30 ரூபாயக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் தற்போது 140 ரூபாயாகவும் காணப்படுகிறது. 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் போஞ்சி தற்போது 200 ரூபாயாகவும் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் கரட் 120 ரூபாயாகவும் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் பீற்றூட் தற்போது 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மற்றைய மரக்கறிகளின் விலையும் அதிகமாகவே காணப்படுகிறது. ஒரு கிலோகிராம் பயற்றங்காய் 200 ரூபாயாகவும் ஒரு கிலோ கிராம் கறி மிளகாய் 140 ரூபாயாகவும், ஒரு கிலோ கிராம் லீக்ஸ் 200 ரூபாயாகவும் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 160 ரூபாயாகவும், வெங்காயம் ஒரு கிலோ கிராம் 120 ரூபாய் ஆகவும், ஒரு கிலோ கிராம் முருங்கைக்காய் 650 ரூபாய் ஆகவும், கோவா 100 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.