யாழில் பலத்த மழையால் மக்கள் பாதிப்பு

யாழ். வலிகாமம் பகுதியில் நேற்றுப் பிற்பகல் முதல் இரவு வரை தொடர்ச்சியாக மழை நீடித்துள்ள நிலையில் மழையுடன் வீசிய பலத்த காற்றுக் காரணமாக வாழைகள் பெருமளவில் குலைகளுடன் முறிந்து விழுந்துள்ளன.

வாழைகள் பெருமளவில் பிஞ்சுக் குலைகளுடனேயே முறிந்து விழுந்துள்ளன. இதனால், தாம் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக வாழைத் தோட்டச் செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். வலிகாமம் பகுதியில் சுன்னாகம், ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், ஈவினை, அச்செழு, குப்பிளான், நீர்வேலி, கோப்பாய், ஊரெழு உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் நிலப் பகுதியில் விவசாயிகள் வாழைச் செய்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காற்றுபாதிப்பு.மக்கள்மழையாழ்ப்பாணம்வாழைகள்
Comments (0)
Add Comment