இவ்வாறான செய்திகள் வெளிவந்ததை தாம் கேள்விப்பட்டதாக குறிப்பிட்டுள்ள இந்திய துணைத் தூதுவர், குறித்த பண்டிகை ஏற்பாட்டிற்கும் இந்திய துணை தூரதகத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாதென குறிப்பிட்டுள்ளார். இது முற்றிலும் தவறான செய்தியென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். மாநகரசபை மைதானத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி ஹோலி பண்டிகை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழர் விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகள் நினைவாக தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் கார்த்திகை மாதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. இவ்வாறான ஒரு மாதத்தில் வழமைக்கு மாறாக ஹோலி பண்டிகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை தமிழ் மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.