நகைச்சுவை நடிகர் கருணாஸ் இன்று யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளார்.
தமிழகத்தில் முகாம்களில் தங்கியுள்ள ஈழத்துச் சிறுவர்களின் கல்விக்காகப் நடிகர் கருணாஸ் பாடசாலை ஒன்றை கட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது,
குறித்த பாடசாலையின் திறப்புவிழாவிற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான அழைப்பிதழை வடக்கு மாகாண முதலமைச்சரின் இல்லத்தில் சந்தித்து கருணாஸ் வழங்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.