யாழ்ப்பாணம் கோப்பாய் இராசவீதிச் சந்தியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் கோப்பாய் இராசவீதியும் இருபாலை வீதியும் சந்திக்கும் சந்தியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்து ஒன்றில் நல்லூர் அரசடியைச் சேர்ந்த பி.தர்மரத்தினம் என்ற வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

கோப்பாயிலிருந்து உரும்பிராய் நோக்கிச் சென்று கொண்டிருந்த பார ஊர்தியும் அச்சுவேலியிலிருந்து கோப்பாய் நோக்கி வந்து கொண்டிருந்த உந்துருளியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இதன் போது உந்துருளியில் பயணித்த பி.தர்மரத்தினம் என்பவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து தொடர்பாக கோப்பாய் சிறீ. காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உந்துருளிபோதனா வைத்தியசாலைவிபத்து
Comments (0)
Add Comment