யாழ். ஆணைக்கோட்டையில் வாள்வெட்டு சம்பவம்

யாழ்ப்பாணத்தில், இலக்கத் தகடற்ற ஜீப்பில் வந்த குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டு தாக்குதலில் மூன்று இளைஞர்கள் காயமடைந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனைக்கோட்டை ஆலடி வைரவர் கோயிலுக்கு அருகாமையில், நேற்றிரவு இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

ஆனைக்கோட்டை ஆலடி வைரவர் கோயிலுக்கு அருகாமையில் இலக்கத் தகடற்ற ஜீப்பில் வந்தவர்கள், வீதியால் மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்களை மறித்து அவர்களை முழந்தாழிட வைத்து, தாக்குதல் நடத்தி உள்ளனர். அவ்வேளை, அந்த வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மற்றுமொரு இளைஞரை அவர்கள் மறிக்க முற்பட்டபோது, குறித்த இளைஞர் நிற்காமல் ஓடியதனால் , தாக்குதலாளிகள், அவரைத் துரத்த முற்பட்டுள்ளனர். இதன்போது, முழங்காலில் இருந்த மூன்று இளைஞர்களும் மோட்டார் சைக்கிள்களைக் கைவிட்டு விட்டு, தப்பியோடியுள்ளனர். தாக்குதலாளிகள் சென்ற பின்னர் தமது மோட்டார் சைக்கிளை இளைஞர்கள் மீட்க சென்ற வேளை அவை நிலத்தில் விழுத்தப்பட்டு , மோட்டார் சைக்கிள் எரிபொருள் தாங்கி வாளினால் வெட்டி சேதமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மோட்டார் சைக்கிள்களின், திறப்புக்களையும் தாக்குதலாளிகள் தம்முடன் எடுத்து சென்றுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சங்கரராஜா சந்திரசேகரன் மற்றும் காக்கைதீவு பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் செல்வம் உட்பட அமரசிங்கம் ஞானவேல் ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனுமதிஆணைக்கோட்டைஇலக்கதகடுஇளைஞர்சம்பவம்ஜீப்தாக்குதல்யாழ்ப்பாணம்வாள்வெட்டு
Comments (0)
Add Comment