இச் சம்பவம் நேற்று மாலை சாவகச்சேரி தனங்களப்பு வீதியில் இடம்பெற்றுள்ளது. தாக்கியவர்கள் முச்சக்கரவண்டியில் மிகுந்த மதுபோதையில் தாக்குதலை நடத்தியுள்ளனர். அத் தருணத்தில். பள்ளி வாசலில் தொழுகை முடித்து விட்டு வெளியே வந்த இரண்டு முஸ்லிம் அன்பர்கள் ஊடகவியாளரை பாதுகாக்க முற்பட்ட போது அவர்களும் . ஆட்டோவில் வந்த மர்ம நபர்களால் பியர் மதுபோத்தலால் தாக்கப்பட்டார்கள்.
ஆட்டோவில் வந்த நபர்கள் ஜக்கிய தேசியக்கட்சி தென்மராட்சி அமைப்பாளர் சர்வானந்தா பெயரை அத்தருணத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து அவர்கள் ஆட்டோவில் தப்பிவிட்டார்கள் .
எனினும் இதனை சர்வானந்தா மறுதலித்துள்ளார்.