யாழ் தெல்லிப்பளை காணிகள் விடுவிக்க ஒப்புதல்!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 948 ஏக்கர் காணியை விடுவிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ண தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரைவை முடிவுகளை அறிவிக்கும் வாரந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் ராஜித்த சேனாரட்ண இவ்வாறு தெரிவித்தார்.
இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அத்துடன் தொடர்ந்தும் வடக்கில் 5 ஆயிரத்து 840 ஏக்கர் காணிகள் இராணுவம் வசம் காணப்படுகிறது. இந்நிலையிலேயே 948 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாகவும், அதில் 2,050 பேரை மீள்குடியமர்த்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒப்புதல்காணிகள்தெல்லிப்பளையாழ்விடுவிக்க
Comments (0)
Add Comment