யாழ்.கிறின் கிறாஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்திய அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் யாழ்.பொதூலகத்தில் அப்துல் கலாமின் நினைவாக பாதி உருவச்சிலையினை நிறுவவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இந்தியாவில் உருவாகிக் கொண்டிருக்கும் அப்துல் கலாமின் சிலை மிக விரைவில் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்து யாழ். பொதுநூலகத்தில் உள்ள இந்திய கோர்னரில் நிறுவவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.